பத்து பஹாட், டிச 26 – தனது சொந்த பாட்டி உட்பட குடும்ப உறுப்பினர்களின் ஆபாச வீடியோக்களை பதிவுசெய்து தொலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டை முகமட் பஸ்லி இசா (Mohamad Fazlie Isa ) என்ற இளைஞன் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவனுக்கு நான்கு நாட்கள் சிறை மற்றும் 4,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
23 வயதுடைய முகமட் பஸ்லி (Mohamad Fazlie Isa ) டிசம்பர் 23 ஆம் தேதி இரவு மணி 11.15 அளவில் ஸ்ரீ மேடனில் உள்ள ஒரு வீட்டில் தனது தொலைபேசியில் ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்களை வைத்திருந்ததாக தண்டனைச் சட்டத்தின் 292ஆவது பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது.
செம்பனை தோட்டத்தை சேர்ந்த அந்த இளைஞன் பதிவு செய்த ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்களுடன் தொடர்புடைய இணைப்பு தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் மூலமாக SKMM) காவல்துறைக்கு கிடைத்தது. குற்றஞ்சாட்டப்பட்ட நபர் தனது பாட்டி மற்றும் உறவினர்களுடன் தங்கியிருந்த வீட்டில் சோதனைசெய்த போலீசார் அவனது கைதொலைபேசியை பறிமுதல் செய்தனர். தனது பாட்டி, அத்தை மற்றும் உறவினர்களின் ஆபாச படங்களை வைத்திருந்த குற்றத்தை அந்த இளைஞன் ஒப்புக்கொண்டான்.