
கோலாலம்பூர், பிப் 17 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 2025/2026 பள்ளி அமர்வின் முதல் நாளான இன்று SK Kampung Baru தேசிய பள்ளிக்கு திடீர் வருகை புரிந்தார்.
அவர் அப்பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாடியதோடு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஒரு புத்தகத்தைப் படிக்க நேரம் ஒதுக்கினார்.
காலை 10 மணிக்கு வந்த அன்வார், சுமார் 40 நிமிடங்கள் பள்ளியில் செலவிட்டார்.
அதற்கு முன்னதாக, ஹாங்காங்கை (Hong Kong)தளமாகக் கொண்ட South China Morning Post செய்தி நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சீன மாநாடு: தென்கிழக்கு ஆசியா 2025 இல் அன்வார் கலந்து கொண்டதோடு அங்கு முக்கிய உரையையும் ஆற்றினார்.
இதனிடையே 2025/2026 கல்வி ஆண்டின் அமர்வு சுமார் 5 மில்லியன் மாணவர்களை உள்ளடக்கியுள்ளது. இன்று 11 மாநிலங்களில் புதிய கல்வி ஆண்டு தொடங்கிய வேளையில் நேற்று கெடா, திரெங்கானு மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களில் 632,260 மாணவர்கள் தங்களது புதிய கல்வி ஆண்டை தொடங்கினர்.