கோலாலம்பூர், நவ 26 – மலேசியாவில் பள்ளி செல்வதற்காக தினசரி சட்டவிரோத தளத்தை பயன்படுத்தி Sungai Golok ஆற்றை கடக்கும் தாய்லாந்தில் வசித்துவரும் மலேசியர்களின் பிள்ளைகள் பாதுகாப்பாக விடுதிகளில் தங்கியிருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் . அந்த மாணவர்களின் கல்வி தொடர்வதையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த பொருத்தமான தங்கும் விடுதிகளை ஏற்பாடு செய்வதற்காக மலேசியர்களின் உறவினர்களிடம் பேச்சு நடத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக் ( Fadhlina Sidek ) தெரிவித்தார்.
டிசம்பர் 1ஆம்தேதியிலிருந்து சுங்கை கோலோக் ஆற்று வழியாக கடந்து செல்வதற்கு தடை அமலுக்கு வருவதால் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய பாதுகாப்பு மன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முன்னேற்பாடு நடவடிக்கையில் இதுவும் அடங்கும் என அவர் கூறினார். டிசம்பர் 1ஆம்தேதிக்கு முன்னதாக இந்த விவகாரத்திற்கு அவசியம் தீர்வு காணப்பட வேண்டியுள்ளது. அதன்பிறகு அந்த மாணவர்களுக்கான தங்கும் விடுதியை ஏற்பாடு செய்வதை உறுதிப்படுத்தும்படி கிளந்தான் கல்வித்துறையிடம் தாம் கேட்டுக்கொள்ள முடியும் என பாட்லினா சிடேக் தெரிவித்தார்.