
கோலாலம்பூர், நவம்பர்-20 – கோலாலம்பூர், ஸ்ரீ பெட்டாலிங் பகுதியில் உள்ள இரவு கேளிக்கை மையமொன்றின் வெளியே ஏற்பட்ட சண்டை தொடர்பில், 17 முதல் 20 வயதிலான 5 இளைஞர்கள் கைதாகியுள்ளனர்.
நேற்று விடியற்காலை இச்சம்பவம் நிகழ்ந்தது.
முன்னாள் காதலியைச் சுற்றிய தகராறு, இரு கும்பல்களுக்கு இடையே அடிதடியாக மாறியது.
அதில் இருவர் காயமுற்றதாக
போலீஸ் கூறியது.
சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
பொது இடத்தில் கலவரத்தில் ஈடுபட்டு தாக்கியது மற்றும் பொது அமைதியை சீர்குலைத்தது ஆகிய கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.



