
பஹாங் பேரா, டிசம்பர் 1 – ‘Scammer call centre’ அதாவது மோசடி தொலைபேசி அழைப்பு நிலைய செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த கும்பல் ஒன்று, போலீஸ் கண்காணிப்பைத் தவிர்ப்பதற்கு நகர்புறங்களை விட்டு விட்டு புறநகர் ஹோட்டல்களில் செயல்பட தொடங்கியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை, 28 முதல் 39 வயதுடைய 8 பேர் கொண்ட கும்பல் ஒன்றை போலீசார் புறநகர் ஹோட்டல் ஒன்றில் கைது செய்தனர் என்று ‘Bera’ மாவட்ட போலீஸ் தலைவர் Zulkiflee Nazir கூறினார்.
அந்தக் கும்பல் ‘Telegram’ செயலியின் வாயிலாக சீன மக்களைக் குறி வைத்து முதலீட்டு ஆலோசகர் அல்லது நிதி அதிகாரியைப் போல நடித்து அவர்களை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டதைப் போலீசார் விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களின் அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.



