![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/10/ec7b9a80-c5f6-4bc4-8584-14a1b1b2474d-700x470.jpg)
பாகான டத்தோ, அக்டோபர் 4 – பாகான் டத்தோ, தேசிய வகை சுங்கை பெர்காமின் (Sungai Pergam) ஆரம்பப்பள்ளியில், நேற்று ஏற்பட்ட புயல் காற்றால் கூரைகள் பறந்துள்ளன.
நேற்று காலை 11.45 மணிக்கு, இரண்டு வகுப்பறைகள் மற்றும் பள்ளியின் சிற்றுண்டிச் சாலை ஆகியவற்றின் மேற்கூரைகள் பறந்து, ஆசிரியர் ஒருவரின் Perodua Bezza வாகனத்தில் விழுந்து சேதமும் ஏற்பட்டது.
அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.