பாசீர் கூடாங், நவ 13 – 79 வயது மூதாட்டியை கத்தி முனையில் மிரட்டி கொள்ளையிட்ட ஐந்து மணி நேரத்திற்குள் ஆடவன் ஒருவன் கைது செய்யப்பட்டான். உள்நாட்டைச் சேர்ந்த 37 வயதுடைய ஆடவன் பாசீர் கூடாங், தாமான் கோத்தா மாசாயில் கைது செய்யப்பட்டதாக ஸ்ரீ அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் சொஹாய்மி இஷாக் ( Mohd Sohami Ishak ) தெரிவித்தார்.
தாமான் கோத்தா மாசாயிலுள்ள ஒரு வீட்டில் தனியாக இருந்த அந்த முதாட்டியிடம் அதிகாலை மணி 12.30 அளவில் அந்த சந்தேக நபர் கொள்ளையிட்டிருப்பது விசாரணை மூலம் தெரிய தெரியவந்துள்ளது.
இந்த கொள்ளையின்போது அந்த மூதாட்டி காயம் எதுவும் அடையவில்லை. 2,000 ரிங்கிட் மதிப்புள்ள ஒரு கை தொலைபேசி, கையடக்க கணினி ஆகிய பொருட்களையும் அந்த ஆடவன் கொள்ளையிட்டுள்ளான். கொள்ளை நிகழ்ந்த அன்றைய தினம் விடியற்காலை மணி 4.30 அளவில் பிடிபட்ட அந்த சந்தேகப் பேர்வழி ஏற்கனவே 15 குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.