பாசீர் கூடாங், நவ 6 – ஜோகூர், பாசீர் கூடாங் நெடுஞ்சாலையின் 14ஆவது கிலோமீட்டரில் ஒரு வழி சாலையில் எதிரே பயணித்த லோரியினால் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று கவிழ்ந்தது.
திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் நிகழ்ந்த அந்த விபத்தில் ஹொன்டா சிவிக் (Honda Civic ) காரை ஓட்டிய 18 வயது இந்தோனேசிய இளைஞர் முகவாய்க் கட்டை, வலது கை மற்றும் காலில் காயம் அடைந்ததால் ஜோகூர் பாரு சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்றார்.
1987 அம் ஆண்டின் சாலை போக்குவரத்து சட்டத்தின் 42ஆவது விதி உட்பிரிவு 1 இன் கீழ் இந்த விபத்து குறித்து விசாரண நடத்தப்பட்டு வருவதாக ஸ்ரீ அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிடென்டன் முகமட் சொஹாய்மி இஷாக் ( Mohd Sohaimi Ishak) தெரிவித்தார்.