
பாசீர் பூத்தே, ஏப் 4 – பாசீர் பூத்தேவிலுள்ள Pasar Siti Hajar சந்தையின் கூரையின் மேல் இன்று அதிகாலையில் ஆடவர் ஒருவர் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து பாசிர் புத்தே தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு அதிகாலை மணி 4.59க்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் ஆறு உறுப்பினர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர் என தீயணைப்புத் துறையின் முதிர்நிலை தலைமை நடவடிக்கை அதிகாரி சித்தி நோர் ரைஹைன் முகமட் ஹராமி ( Siti Nor Raihan Mohamed ) தெரிவித்தார்.
அங்கு 40 வயது ஆடவர் சுயநினைவற்ற நிலையில் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. அந்த நபர் இறந்துவிட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இதனிடையே இச்சம்பவத்தை பாசீர் பூத்தே மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Zaizul Rizal உறுதிப்படுத்தினார்