Latestமலேசியா

பாதிரியார் ரேய்மண்டு கோ குடும்பத்துக்கு RM3.7 மில்லியன் வழங்குமாறு அரசாங்கம் & போலீஸுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

 

கோலாலம்பூர், நவம்பர்-6,

கிறிஸ்தவ ஃபாதிரியார் ரேய்மண்ட் கோ (Raymond Koh) கடத்தல் வழக்கில், மலேசிய அரசாங்கமும், போலீஸும் RM37 மில்லியன் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2017-ஆம் ஆண்டு மர்மமான முறையில் கடத்தப்பட்ட நாளிலிருந்து, அவர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்படும் வரை ஒவ்வொரு நாளும் RM10,000 அக்குடும்பத்துக்கு வழங்கப்பட வேண்டும்.

அப்படிக் கணக்கிட்டால் மொத்தம் 3,187 நாட்களுக்கு RM31 மில்லியன் கொடுக்க வேண்டும்.

அப்பணம், கோ உயிரோடோ பிணமாகவோ கண்டுபிடிக்கப்படும் வரை, ஓர் அறங்காப்பு நிதியில் வைக்கப்பட வேண்டும்.

அதே சமயம், ஒரு முன்மாதிரியாக இருக்கவும் ஏற்பட்ட மோசமான சேதங்களுக்கும் தனியாக RM6 மில்லியன் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

“ஒரு நிமிடத்திற்குள் நடந்த அக்கடத்தலில் காணப்பட்ட ஒருங்கிணைப்பு, கடத்தலின் துல்லியம் மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்களின் ஈடுபாடு ஆகியவை, சரியான முன் திட்டமிடல் மற்றும் முன் பயிற்சியை தெளிவாக நிரூபிக்கின்றன” என்பதை நீதிமன்றம் கண்டறிந்தது.

எனவே இது ஏதோ பத்தோடு பதினொன்றாக நடந்த வன்முறை அல்ல என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

போலீஸ் படைக்கு மட்டுமே கிடைக்கும் அரசு வளங்கள் மற்றும் வழிமுறையைப் பயன்படுத்தி அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதால், இந்த இழப்பீட்டுத் தொகை நியாயமானதே என்றார் அவர்.

2017 பிப்ரவரி 13-ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா Jalan SS4B/10 சாலையில் காரில் போய்கொண்டிருந்த போது கோ கடத்தப்பட்டார்.

கருப்பு இராணுவ உடையில் முகமூடி அணிந்த 5 நபர்கள், கோவை கரிலிருந்து இழுத்துச் சென்றதாக நீதாமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்தே, அவருடைய குடும்பம் மனித உரிமை மீறலுக்காக அரசாங்கம் மற்றும் போலீஸுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு மலேசியாவில் மனித உரிமை மற்றும் போலீஸின் பொறுப்புத் தன்மைக்கு முக்கியமான தீர்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!