
கோலாலம்பூர், மார்ச்-30-உடம்புபிடி மையத்தில் ‘பாதுகாப்பு பணம்’ கோரிய வீடியோ வைரலான நிலையில், பி.கே.ஆர் கட்சியின் 2 உறுப்பினர்கள் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் அதனை உறுதிப்படுத்தினார்.
கூட்டரசு பிரதேச குடியிருப்பாளர்கள் மன்ற உறுப்பினர்களான அவ்விருவரும், வங்சா மாஜுவில் உள்ள அந்த உடம்புபிடி மையத்தில் பணம் கோரியதாகக் கூறப்படுகிறது.
வட்டார மக்கள் கொடுத்த புகாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமலிருக்க, அந்த ‘பாதுகாப்புப் பணம்’ பெறப்பட்டதாக நம்பப்படுகிறது.
கூட்டரசு பிரதேச அமைச்சரின் உத்தரவின் பேரில் அது தொடர்பில், 3 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து மிரட்டிப் பணம் பறித்த புகாரில் கைதாகி அவர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.
கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL, இந்தச் சம்பவத்தில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என ஏற்கனவே தெளிவுப்படுத்தியுள்ளது.



