கோலாலம்பூர், நவ 12 – 14 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டது தொடர்பில் 20 மற்றும் 25 வயதுக்கிடையிலான நான்கு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மணி 12.30 அளவில் தனக்கு அறிமுகமான சந்தேகப் பேர்வழியுடன் அவரது மோட்டார் சைக்கிளில் Bayan Lepas , Relau வுக்கு சென்றுள்ளார். அங்குள்ள ஒரு வீட்டின் அறையில் அந்த சந்தேகப் பேர்வழி அப்பெண்ணை கற்பழித்துள்ளார். அதே அறையில் இரண்டாவது நபரால் இந்த இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் பினாங்கு Barat Daya போலீஸ் தலைவர் கமருல் ரிசால் ஜெனால் ( Kamarul Rizal Jenal) தெரிவித்தார்.
அதன் பிறகு, மூன்றாவது சந்தேக நபர் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் பலாத்காரம் செய்வதற்காக மற்றொரு அறைக்கு இழுத்துச் சென்றார் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த மூன்று சந்தேக நபர்களும் அச்சிறுமியை பாயான் பாருவில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தைப் பார்க்க அழைத்துச் சென்றதாகவும், அதிகாலை 4 மணியளவில் வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும், ஒரு மணி நேரம் கழித்து வீட்டிற்கு அனுப்புவதற்கு முன்பு, அவர்கள் மீண்டும் பலாத்காரம் செய்ததாகவும் கமருல் கூறினார்.
ஏப்ரல் மாதம் முதல் சந்தேக நபருடன் சிறுமிக்கு அறிமுகம் இருந்ததாகவும் ஆனால் மற்றவர்களை தெரியாது என்றும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் நான்காவது சந்தேக நபருக்கு என்ன தொடர்பு என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.