நிபோங் திபால், செப்டம்பர் 26 – தொழிற்சாலைகளில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரண்டு வியட்நாம் ஆடவர்கள், இன்று அதிகாலை காவல்துறையினரைப் பாராங்கில் தாக்கியதில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இன்று அதிகாலை 3 மணியளவில், புக்கிட் பன்சோரிலுள்ள (Bukit Panchor) தொழிற்சாலையிலிருந்து அந்த ஆடவர்கள் வெளியே வரும்போது பிடிப்பட்டுள்ளனர்.
அப்போது, ‘பாராங்’ கத்தியைக் கொண்டு, ரோந்து பணியிலிருந்த போலிசாரைத் தாக்க முற்பட்ட போது, இந்த துப்பாகிச் சூட்டு சம்பவம் நடந்துள்ளது.
இச்சம்பவத்தில் இருவரும் உயிரிழந்ததை பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ ஹம்சா அகமட் (Datuk Hamzah Ahmad) உறுதிப்படுத்தினார்.