Latestமலேசியா

பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் உணவு ஆர்டர் செய்யாமல் பெண் சுற்றுப்பயணி அமர்ந்திருந்த மேசையை நிர்வாகி அகற்றிய காணொளி வைரல்

கோலாலம்பூர், டிச 23 – வெளிநாட்டுப்  சுற்றுப் பயணி என கருதப்படும் ஒரு பெண் உணவு மற்றும் பானங்கள் எதுவும் ஆர்டர் செய்யாமல், அவர் அமர்ந்திருந்த நாற்காலி மற்றும் மேசையை அகற்றிவிட்டு, அந்த வளாகத்தை விட்டு வெளியேறும்படி  உணவக மேலாளர், சைகைகாட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவிற்கு சமூக ஊடகப் பயணர்கள்  பலவகையான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். பெரும்பாலானோர் உணவக மேலாளரின் செயல்களை ஆதரிக்கின்றனர், வளாகத்தில் உள்ள மேஜை மற்றும் நாற்காலி உணவகத்தின் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதே இதற்கான காரணமாகும். 

 உணவக வாடிக்கையாளர்களுக்கான பிரத்யேகமாக ஒரு மேஜையில் அந்த பெண் தனது மடிக்கணினியைப் பயன்படுத்துவதைக் காணமுடிகிறது. 

நல்லெண்ணத்தாலும் மரியாதையாலும், உணவக மேலாளர் முதல் 30 நிமிடங்களுக்கு  அந்த பெண்ணுக்கு எதிராக தொந்தரவு செய்யாமல் அமைதியாக இருந்தார். 

பினாங்கு அனைத்துலக  விமான நிலையத்தில் நடந்ததாக நம்பப்படும் இந்த சம்பவம் பதிவு செய்யப்பட்டு  erwanyusoff44 இன் TikTok கணக்கில் வெளியிடப்பட்டது. 

நான்கு நாட்களுக்கு  முன்பு வெளியிடப்பட்ட இந்த காணொளி 32,000 க்கும் மேற்பட்டோரின்  லைக்சையும்  மற்றும் 3,900 க்கும் மேற்பட்டோரின் கருத்துகளையும்  பெற்றுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!