Latestமலேசியா

பினாங்கு பாரம்பரியமாக தைப்பூச ஊர்வலம், நாசி கண்டார் உள்ளிட்டவை பிரகடனம்

 

ஜோர்ஜ்டவுன், ஜனவரி-30 – பினாங்கு மாநிலத்தின் பாரம்பரியக் கலாச்சார அம்சங்களில் ஒன்றாக தைப்பூச ஊர்வலம் சேர்க்கப்பட்டுள்ளது.

மாநில முதல்வர் Chow Kon Yeow அதனை அறிவித்தார்

பத்து மலை தைப்பூசத்துக்கு அடுத்து பிரசித்திப் பெற்றது பினாங்கு தண்ணீர் மலை தைப்பூசமாகும்.

இங்கும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் படையெடுப்பர்; தவிர சுற்றுப் பயணிகள் மத்தியிலும் படு பிரபலமாகும்.

19-ஆம் நூற்றாண்டிலிருந்து மக்களால் பின்பற்றப்படும் இக்கலாச்சாரம் இன்று வரை சிறப்புக் குறையாமல் தொடருவதை கருத்தில் கொண்டு தைப்பூச ஊர்வலத்திற்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தைப்பூசத்தோடு, சீனர்களின் ‘Chingay’ ஊர்வலம், நாசி கண்டார் கலாச்சாரம், கோப்பிதியாம் கலாச்சாரம், புக்கிட் மெர்தாஜாம் புனித அன்னமாள் திருவிழா, தஞ்சோங் பினாங்கு மலாய் வட்டார வழக்கு ஆகிய 5 அம்சங்களும் மாநில பாரம்பரிய கலாச்சாரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இவ்வேளையில், பினாங்கின் 10 பாரம்பரிய உணவுகள் பட்டியலிலும் நாசி கண்டார் முன்னணியில் உள்ளது.

நாசி கண்டார் போலவே அனைத்து மக்களாலும் விரும்பி உண்ணப்படும் pasembor எனப்படும் ரோஜாக், Char Kue Kak, oh chien, kerabu bihun, Hokkien mee, mee udang, mee sotong, mee Jawa, roti benggali ஆகியவையும் அப்பட்டியலில் உள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!