
கோலாலம்பூர், அக்டோபர் 29 – கோலாலம்பூரில் அமைந்துள்ள மேரி ஆதரவற்றக் குழந்தைகள் இல்லத்தில், S7 நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் ஸ்ரீ மற்றும் அவர்தம் நண்பர்கள் ஏற்பாட்டில் தீபாவளி கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு ஆதரவற்றக் குழந்தைகள் இல்லத்தில் கடந்த 10 வருடங்களாகக் தீபாவளியை கொண்டாடி வரும் இவர்கள், இவ்வாண்டு மேரி ஆதரவற்றக் குழந்தைகளை மகிழ்வித்தனர்.
75 குழந்தைகளுக்குப் புத்தாடைகள், இனிப்புகள், பலகாரங்கள், மற்றும் பட்டாசோடு உணவும் வழங்கப்பட்டது.
‘முடிந்த வரை இல்லாமையை இல்லாது ஆக்குவோம்’ என்ற இலக்குடன் செயல்படும் ஸ்ரீ மற்றும் அவர்தம் நண்பர்கள், அடுத்து வரும் ஆண்டுகளிலும் இதே போன்று ஆதரவற்றவர்களோடு தீபாவளியை கொண்டாட உறுதி கொண்டுள்ளனர்.