
கோலாலம்பூர், ஜனவரி 27 – வாகனங்களுக்கான roadtax அதாவது சாலை வரி ஸ்டிக்கர், 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 முதல் இனி அச்சிடப்படாது என Pos மலேசியா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இதுநாள் வரை, pos மலேசியா வழங்கி வந்த roadtax அச்சிடும் சேவையும் முழுமையாக நிறுத்தப்படவுள்ளது. இந்த நடவடிக்கை, சாலை போக்குவரத்து துறையான JPJ மேற்கொண்டு வரும் டிஜிட்டல் திட்டத்தின் தொடர்ச்சியாகும்.
தற்போதைய நடைமுறையின் படி, சாலை வரி மற்றும் மலேசிய ஓட்டுநர் உரிமம் ஆகியவை MyJPJ செயலியின் மூலம் டிஜிட்டல் வடிவில் காண்பிக்கலாம். சாலை சோதனைகள் மற்றும் அதிகாரிகளின் பரிசோதனைகளின் போது, இந்த டிஜிட்டல் ஆவணங்களே போதுமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஓட்டுநர் உரிமத்தை அட்டை வடிவில் பயன்படுத்த விரும்பும் பொதுமக்கள், 20 ரிங்கிட் கட்டணத்தைச் செலுத்தி அந்த அட்டையை தொடர்ந்து விண்ணப்பித்து பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய முடிவு, அரசின் டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



