
கோலாலம்பூர், ஜனவரி-26-பிரிக்ஃபீல்ட்ஸ் Temple of Fine Arts நுண்கலை மண்டபம், ‘திருமுறை இன்னிசை அரங்கம் 2026’ எனும் இசை நிகழ்வால் பக்தி பரவசத்தில் திளைத்தது.
கடந்த சனிக்கிழமை சிறப்பாக நிறைவு பெற்ற இந்நிகழ்வை, சச்சிதானந்தா மியூசிக்கல் நிறுவனம் “திருமுறை எம் உரை முறை” என்ற கருப்பொருளில் ஏற்பாடு செய்தது.
3 வயது குழந்தைகள் முதல் அனுபவம் வாய்ந்த கலைஞர்கள் வரை பலரும் திருமுறைப் பாடல்களை இசையோடு வழங்கினர்;
இதனால், அரங்கம் முழுவதும் பக்தி உணர்வு நிறைந்திருந்தது.
தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் மற்றும் பிரதமர் அலுவலக இந்திய விவகாரப் பிரிவு சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் இயக்குநரும், சச்சிதானந்தா மியூசிக்கல் நிறுவனருமான Lt.Col.(R) Ir.Ts.Dr. விக்னேஸ்வரன் முனிக்கண்ணன், “திருமுறை என்பது இசை மட்டுமல்ல, வாழ்வியல் நெறியைப் போதிக்கும் ஒளிக்கோல்” என வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
இளம் தலைமுறைக்கு நற்பண்புகளை வளர்க்கும் இதுபோன்ற முயற்சிகள் தொடர வேண்டுமென, யுனேஸ்வரன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சுமார் 600 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பக்தி பரசவமடைந்தனர்.



