![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2025/02/l.jpg)
கங்கார், பிப்ரவரி-7 – பெர்லிஸில் கடந்த மாதம் பிறந்த குழந்தையை ஓர் உணவகத்தில் கைவிட்டுச் சென்றதாக உணவக உதவியாளர் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
கங்கார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, 30 வயது Nor Zainab Jamaludin அதனை ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து 6,000 ரிங்கிட் மற்றும் ஒரு நபர் உத்தரவாதத்தில் அப்பெண்ணை ஜாமீனில் விடுவித்த நீதிமன்றம், மார்ச் 19-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருமென்றது.
ஜனவரி 19 ஆம் தேதி காலை 6.30 மணியளவில் சங்லாங்கில் உள்ள கம்போங் ராமாவில் உள்ள ஓர் உணவகத்தில், பிறந்த குழந்தையை கைவிட்டுச் சென்றதாக Zainab மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
கைவிடும் நோக்கத்துடன் குழந்தைப் பிறந்ததை மறைத்ததற்காக, அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.