
பீடோர், அக்டோபர்-23 – பீடோரில் உள்ள தொழிற்சாலை ஊழியர்களுக்கான குடியிருப்பில் நேற்று முன்தினம் ஓர் ஆடவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், பேராக் போலீஸ் நால்வரைக் கைதுச் செய்துள்ளது.
அவர்களில் இருவர் வெளிநாட்டவர்கள் ஆவர்.
உள்ளூர் ஆடவர்களான இரு சந்தேக நபர்களும் ஏற்கனவே போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பில் குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ளனர்.
கொல்லப்பட்ட ஆடவரின் அண்ணி கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர்கள் கைதாகினர்.
சம்பவத்தன்று அதிகாலை 2.30 மணிக்கு அந்தத் தொழிலாளர் குடியிருப்பில் காயங்களுடன் விழுந்துகிடந்த 34 வயது ஆடவருக்காக, அவரின் அண்ணன் அங்கிருந்த உள்ளூர் சந்தேக நபரிடம்
நியாயம் கேட்டுள்ளார்.
அப்போது தன் கண் முன்னே இரும்புக் கம்பினால் தன் கணவர் தாக்கப்பட்டதாக, அப்பெண் தனது போலீஸ் புகாரில் கூறினார்.
காயத்துக்கு தாப்பா மருத்துவமனையில் மருந்து போட்டு விட்டு திரும்பி
போது, மைத்துனர் வீட்டு வாசலில் இறந்து கிடந்ததாக அவர் சொன்னார்.
இந்நிலையில் கைதான அந்நால்வரையும் தடுத்து வைத்து விசாரிக்க இன்று தாப்பா மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆணைப் பெறப்படும் என தாப்போ போலீஸ் கூறியது.