Latestமலேசியா

புதிய தலைமுறைக்கான அடையாளக் அட்டை மாற்றும் இறுதி கட்டத்தில் தேசிய பதிவுத்துறை

கோலாலம்பூர், நவ 20 – MY Kad generasi Baharu எனப்படும் புதிய தலைமுறை அடையாளக் கார்டு வழங்குவதற்கான இறுதி கட்டத்தில் தற்போது தேசிய பதிவுத்துறை இருப்பதாக உள்துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசாரா, ( Samsul Anuar Nasarah) தெரிவித்திருக்கிறார். தற்போது நடப்பில் இருந்துவரும் My Kad அடையாளக் கார்டு 2012 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு பதில் வழங்கப்படவிருக்கும் MY kad generasi baharu அடையாள கார்டு உயர் பாதுகாப்பு அம்சங்கம்களையும் , அதற்கு ஏற்றவாறு பாதுகாப்பாக மேம்படுத்தப்படுவதையும் உறுதி செய்வதற்காக புதிய கட்டமைப்புடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதோடு அண்மைய பாதுகாப்பு தொழில்நுட்ப மேம்பாடுகளும் அதில் சேர்க்கப்பட்டுள்ளன.

மலேசியாவின் முக்கிய ஆவணமான MyKad-ஐ போலியாக உருவாக்கி தவறாகப் பயன்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியையும் நிறுத்தப்படும் என நாடாளுமன்றத்தில் தேசிய முன்னணி Tenggara நாடாளுமன்ற உறுப்பினர் மான்ஸ்ரீ நசிப் (Manndzri Nasib ) எழுப்பிய வாய்மொழி கேள்விக்கு பதில் அளித்தபோது ஷம்சுல் அனுவார் தெரிவித்தார். குடியுரிமை அடையாள கார்டுகளை போலியாக்கும் பிரச்னையை சமாளிப்பதற்கு MY kad generasi baharu அறிமுகப்படுத்தப்பட்டவுடன் பழைய MyKad டின் அனைத்து செயல்பாடுகளும் அகற்றப்படும் என இதற்கு முன் தேசிய பதிவுத் துறையின் தலைவர் Badrul Hisham கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!