பூச்சோங், அக்டோபர்-25 – சிலாங்கூர், பூச்சோங், 14-வது மைலில் சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் சைக்கிளோட்டியை இடித்துத் தள்ளி விட்டு SUV கார் நிற்காமல் போகும் dashcam வீடியோ வைரலாகியுள்ளது.
சிவப்பு விளக்கில் மற்ற வாகனங்கள் எல்லாம் நிற்கும் போது இந்த ஒரு SUV மட்டும் நிற்காமல், வலது பக்கமாக வளைந்த சைக்கிளோட்டியை மோதியது.
மோதி விட்டு அக்கார் நிற்காமல் செல்கிறது; சைக்கிளோட்டியோ சாலையில் விழுந்து விட்டார்.
பின்னர் சுதாகரித்து கொண்டு எழுந்தவர், சைக்கிளில் சாலையைக் கடந்தார்.
Edisi Siasat டெலிகிராம் குழுவில் பகிரப்பட்டுள்ள அவ்வீடியோவில், அச்சம்பவம் செப்டம்பர் 27-ஆம் தேதி மாலை 6 மணிக்கு நிகழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.