Latestமலேசியா

சாலைத் தடுப்பு சோதனையின்போது தப்பிச் செல்ல முயன்று போலீஸ் வாகனத்தை மோதிய இரு குற்றவாளிகள் ஆரா டமன்சராவில் கைது

கோலாலம்பூர், டிச 27 – சாலைத் தடுப்பு சோதனையின்போது தப்பிச் செல்ல முயன்று போலீஸ் வாகனத்தை மோதிய இரு குற்றவாளிகள் Ara Damansaraவில் கைது செய்யப்பட்டனர்.

நேற்று காலை மணி 11.32 அளவில் புரோட்டோன் சத்ரியா (Proton Satria ) காரில் பயணம் செய்த அவ்விருவரும் முன்னதாக மோட்டார் சைக்கிளோட்டி ஒருவரை மோதினர்.

Damansara-Puchong LDP நெடுஞ்சாலையில் 16 ஆவது கிலோமீட்டரில் அந்த சந்தேகப் பேர்வழிகள் போலீஸ் சோதனையின்போது தப்பிச் செல்ல முயன்ற்போது இந்த சம்பவம் நடந்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் ஷாருல்நிஷாம் ஜபார் (Sharulnizam Ja’afar) தெரிவித்தார்.

அந்த சந்தேகப் பேர்வழிகளை போலீஸ் ரோந்துக் காரில் இருந்த போலீஸகாரர்கள் துரத்திச் சென்று ஜாலான் PJU 1A/1 Ara Damansaraவில் கைது செய்தனர்.

அந்த காரில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 12.87 கிரேம் ஷாபு போதைப் பொருள் மற்றும் மின்அதிர்வு கருவியும் பறிமுதல் செய்யப்பட்டது.

காரை ஓட்டிய நபர் இதற்கு முன் போதைப் பொருள் உட்பட 16 பழைய குற்றச்சசெயல்களில் சம்பந்தப்பட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

இரண்டாவது சந்தேகப் பேர்வழி இதற்கு முன் ஒரு குற்றச்செயல் பின்னணியைக் கொண்டிருந்ததாக Sharulnizam கூறினார். விசாரணைக்காக அந்த இரண்டு நபர்களும் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!