
ஈப்போ, மார்ச்-30 – பேராக், லூமூட்டில் பூட் பகுதியில் ஹரி ராயா பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த கார் சாலையில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
லூமூட், புக்கிட் பெர்மாத்தாவில் பரபரப்புமிக்க சாலைச் சந்திப்பில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்ததாக, மஞ்சோங் போலீஸ் தலைவர் ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் கூறினார்.
24 வயது இளைஞர் ஓட்டிச் சென்ற Proton Gen-2 கார், தீ பிடிப்பதற்கு முன் திடீரென பழுதானது.
அப்போது காரின் இயந்திரத்தை முடுக்கி விட அவ்வாடவர் முயன்ற போது, பின்பக்க டயரிலிருந்து புகைக் கிளம்பி, அதைத் தொடர்ந்து தீ ஏற்பட்டதையும் கண்டு அதிர்ச்சியுற்றார்.
தகவல் கிடைத்து வந்து சேர்ந்த தீயணைப்பு-மீட்புப் படை தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
எவருக்கும் அதில் காயமேற்படவில்லை.
அச்சம்பவம் சமூக ஊடகங்களிலும் வைரலானது.
இந்நிலையில் மேற்கொண்டு விசாரிக்க, தகவல் தெரிந்த பொது மக்களின் உதவியை மஞ்சோங் போலீஸ் நாடியுள்ளது.