
ஜோர்ஜ்டவுன், டிசம்பர் 15-பினாங்கு இந்து அறப்பணி வாரியம், தீவில் உள்ள அனைத்து பதிவுப் பெற்ற கோவில்களின் இளைஞர்களை இணைத்து, முதல் முறையாக லீகா பெர்சஹாபாத்தான் ஜெம்புத்தான் பெலியா குயில் (Liga Persahabatan Jemputan Belia Kuil) எனும் எழுவர் கால்பந்து போட்டியை வெற்றிகரமாக நடத்தியது.
இப்போட்டியை, Lebuh Queen ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் ஏற்பாடு செய்தது.
நிதித் துறை துணையமைச்சர் லிம் ஹுய் யிங் போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து, RM5,000 நிதியுதவியும் வழங்கினார்.
கோவில்களின் முதுகெலும்பாக விளங்கும் இளைஞர்களை விளையாட்டு மூலம் தலைமைத்துவம், ஒற்றுமை மற்றும் சமூக ஒத்துழைப்பில் முன்னேற்றுவதற்காக இந்த முயற்சி, தொடங்கப்பட்டது.
இது வெறும் விளையாட்டு அல்ல, மாறாக ஒற்றுமை மற்றும் ஒழுக்கத்தை வளர்க்கும் ஒரு தளம் என துணையமைச்சர் வலியுறுத்தினார்.
இது மலேசியா மடானி உணர்வைப் பிரதிபலிக்கிறது என்றார் அவர்.
இந்து அறப்பணி வாரியத்தின் சார்பில் பங்கேற்ற அதன் துணைத் தலைவர் செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம், ஏற்பாட்டாளர்களின் இந்த தைரியமான முயற்சியைப் பாராட்டினார்.
முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வரலாற்று நிகழ்வு எதிர்காலத்தில் மேலும் பல இளைஞர் சார்ந்த திட்டங்களுக்கு வழிகாட்டும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.



