Latestஉலகம்

பெங்களூரு பஸ் நிலையத்திற்கு அருகே தனது மகள் முன்னே 11 முறை மனைவியை கத்தியால் குத்திய கணவன் கைது

பெங்களூரு, செப் 24- பெங்களூரு (Bengaluru) பஸ் நிலையம் முன் பொதுமக்கள் முன்னிலையில் தனது மனைவியை 11 முறை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூருவின் மாகடி (Magadi) சாலையில் உள்ள பேருந்து நிலையம் அருகே பொது இடத்தில் தனது மனைவி K.Rekhaவை கத்தியால் குத்திய 43 வயது Lohitashwa பின்னர் போலீசில் சரணடைந்தார்.

இந்த தகராறின்போது Rekhaவின் 12 வயது மகள் தலையிட முயன்றதாகவும் ஆனால் தனது தந்தையை அவரால் தடுக்க முடியவில்லை என்று கூறப்பட்டது.

கடுமையாக கத்திக் குத்து காயத்திற்கு உள்ளான 32 வயதுடைய Rekha அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் இறந்தார்.

Rekha, Magadi சாலையில் உள்ள Tavarekereயில் உள்ள ஒரு call சென்டரில் பணிபுரிந்தார், மேலும் தனது கணவர் Lohitashwaவுக்கு அங்கு ஒரு டாக்சி டிரைவராக வேலை கிடைக்கவும் அவர் உதவியுள்ளார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!