
தம்பின், ஜனவரி-28 – நெகிரி செம்பிலான், தம்பினில் பெண்ணின் பாவாடைக்குக் கீழ் புகைப்படம் எடுத்து அநாகரீகமாக நடந்து கொண்டதாக சந்தேகிக்கப்படும்
ஒரு நபரை போலீசார் கைதுச் செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் பிற்பகல் 3.10 மணிக்கு அங்குள்ள பேரங்காடியில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
புகார்தாரரான 34 வயது பெண்ணை பின்தொடர்ந்து சென்ற சந்தேக நபர், திடீரென பாவாடைக்குக் கீழ் புகைப்படம் எடுத்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீஸ், நேற்று மாலை கம்போங் பாரு தம்பினில் கைதுச் செய்தது.
விசாரணைக்காக 3 நாட்கள் அவ்வாடவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.



