Latestமலேசியா

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் முதன்மை பிரதமர் வேட்பாளர் துவான் இப்ராஹிம்; மற்றொரு தேர்வு சனுசி என பாஸ் இளைஞர் பிரிவு பரிந்துரை

அலோர் ஸ்டார், செப்டம்பர்-13 – பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளருக்கான தங்களின் முதல் தேர்வு, பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் என, அதன் இளைஞர் பிரிவு அறிவித்துள்ளது.

கட்சித் தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கும் பிரதமர் பதவிக்குத் தகுதியானவரே… ஆனால் அவரின் உடல் ஆரோக்கியப் பிரச்னை குறுக்கே நிற்பதால், துவான் இப்ராஹிமே சிறந்த தேர்வு என, பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் Afnan Hamimi Taib Azamuddin கூறினார்.

பெரிக்காத்தான் கூட்டணியையும் நாட்டையும் வழிநடத்திச் செல்லும் ஆற்றல்மிக்க தலைவர்கள் பாஸ் கட்சியில் பலர் உள்ளனர்.

மத்திய அமைச்சர்களாகவும் மாநில மந்திரி பெசார்களாகவும் பணியாற்றிய அனுபவம் அவர்களுக்குண்டு.

கெடா மந்திரி பெசாரும் பெரிக்காத்தான் தேர்தல் இயக்குநருமான டத்தோ ஸ்ரீ முஹமட் சனுசி நோரும் (Muhammad Sanusi Nor) அவர்களில் அடங்குவார் என, பாஸ் இளைஞர் பிரிவின் பேராளர் மாநாட்டுக்குப் பிறகு Afnan Hamimi கூறினார்.

பாஸ் உதவித் தலைவர்களான இட்ரிஸ் அஹ்மாட், திரங்கானு மந்திரி பெசார் அஹ்மாட் சம்சுரி மொக்தார் ஆகியோரும் தலைமையேற்கத் தகுதியானவர்களே என்றார் அவர்.

கடந்த வாரம் பெர்சாத்து பேராளர் மாநாட்டில் பெரிக்காத்தான் கூட்டணியின் அடுத்த பிரதமர் வேட்பாளராக தான் ஸ்ரீ முஹிடின் யாசின் அறிவிக்கப்பட்டார்.

அப்போதே, இதில் அவசரம் காட்ட வேண்டாம் என சனுசி உள்ளிட்ட பாஸ் தலைவர்கள் பேசியிருந்த நிலையில், இப்போது பிரதமர் பதவியைக் கைப்பற்ற பாஸ் தயாராகி வருவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!