Latestமலேசியா

பெரிய அளவில் கடத்தி வரப்பட்ட காண்டாமிருக கொம்புகள் சிங்கப்பூரில் பறிமுதல்

சிங்கப்பூர், நவ 18 – சிங்கப்பூரில் லாவோசுக்கு செல்லும் கப்பலில் இருந்து சுமார் 1,130,000 சிங்கப்பூர் வெள்ளி அல்லது (867,430) அமெரிக்க டாலர் மதிப்புள்ள 35.7 கிலோ கடத்தப்பட்ட காண்டாமிருகக் கொம்புகளை சிங்கப்பூர் பறிமுதல் செய்துள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு சிங்கப்பூரில் மிகப்பெரிய அளவில் கடத்தப்பட்ட காண்டாமிருக கொம்புகள் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பூங்கா வாரியம் தெரிவித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் தளவாடங்கள் பொருத்தக்கூடிய பொருட்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்ட நான்கு சரக்குகளின் கப்பலில் காண்டாமிருக கொம்புகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதவிர எலும்புகள், பற்கள் மற்றும் நகங்கள் உட்பட சுமார் 150 கிலோவைக் கொண்ட பிற விலங்குகளின் உடற்பாகங்களும் அதில் இருந்தன. விசாரணையில் கொம்புகள் வெள்ளை காண்டாமிருகங்களுக்குச் சொந்தமானவை என்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்தவை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மற்ற விலங்குகளின் உடல் உறுப்புக்களை அடையாளம் காணும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வழக்கமான பரிசோதனையின்போது வனவிலங்கு பாகங்கள் கண்டறியப்பட்டன. ஊழியர் ஒருவர் கப்பலில் இருந்து துர்நாற்றம் வீசுவதைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து பரிசோதனை மற்றும் ஆய்வுக்கு வழிவகுத்ததோடு இது குறித்து போலீஸ் மற்றும் தேசிய பூங்கா வாரியத்திற்கு எச்சரிக்கப்பட்டது.

சந்தையில் மீண்டும் நுழைவதைத் தடுக்க அனைத்துலக வழிகாட்டுதல்களின்படி பறிமுதல் செய்யப்பட்ட காண்டாமிருகங்களின் கொம்புகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!