
பெர்சாத்து துணைத் தலைவர் ஹம்சா சைனுடின் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டார்
கோலாலாம்பூர், பிப்ரவரி-13,
பெர்சாத்து உட்பூசலின் உச்சக்கட்டமாக துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடின் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கட்சி விதிகளை மீறியதாக் கூறி பெர்சாத்து கட்டொழுங்கு வாரியம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
பெர்சாத்து பொதுச் செயலாலர் டத்தோ ஸ்ரீ அஸ்மின் அலி அதனை அறிக்கையொன்றில் உறுதிப்படுத்தினார்.
ஹம்சாவின் நீக்கம் உடனடியாக அமுலுக்கு வருகிறது; எனினும் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவருக்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைமைத்துவத்திற்கு எதிராக ஹம்சா செயல்படுவதாகவும், இதனால் தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் பொறுமை இழந்திருப்பதாகவும் முன்னதாகக் கூறப்பட்ட நிலையில், ஹம்சா நீக்கப்பட்டுள்ளார்.
தற்போது வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படும் ஹம்சா தரப்பிலிருந்து இதுவரை எந்த கருத்தும் வெளியிடப்படவில்லை.
ஹம்சாவின் நீக்கம் பெர்சாத்து உட்பூசலுக்குத் தீர்வா அல்லது இதை விட பெரியப் பிளவுக்கான அறிகுறியாக என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரிய வரும்.



