பேங்காக் , டிச 6 – தாய்லாந்தில் Nakhon Si Thammarat வட்டாரத்தில், போலீஸ் நிலையத்திற்கு வெளியே தனக்கு சொந்தமான பிக் அப் வாகனத்தினால் மனைவி மற்றும் மகனை மோதித் தள்ளிய ஆடவனை போலீசார் கைது செய்தனர். கடந்த இரண்டு வார காலமாக தலைமறைவாக இருந்த 27 வயதுடைய Pino Sisooksai கிராபியிலுள்ள அவனது குடும்ப வீட்டில் கைது செய்யப்பட்டான். அந்த ஆடவனுக்கு எதிராக அவனது மனைவியான 26 வயதுடைய Lek , மகன் மற்றும் குடும்பத்தின் இதர உறுப்பினர்கள் நவம்பர் 20 ஆம் தேதி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் செய்திருந்தனர்.
தனது கணவரினால் அடிக்கடி உடல் ரீதியில் துன்புறுத்தப்பட்டு வந்ததால் பாதுகாப்பு குறித்து அஞ்சியதால் அவருக்கு எதிராக போலீசில் புகார் செய்ததாக Lek தெரிவித்தார். மனைவி மற்றும் பிள்ளையை வாகனத்தில் மோதி கொல்ல முயன்றதாக அந்த சந்தேகப் பேர்வழிக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டது.