Latestமலேசியா

பேராக் மாநில அமால் மக்மூர் இயக்கத்தின் ஏற்பாட்டில் 113 சாதனை இந்திய மாணவர்கள் கௌரவிப்பு

ஈப்போ, மே 19 – பேரா மாநில அமால் மக்மூர் சமூக நல இயக்கத்தின் ஏற்பாட்டில் சீமோரிலுள்ள கந்தன் ஸ்ரீ வீரம்மா காளியம்மன் ஆலயத்தில் பேரா மாநில தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான சாதனையாளர் விருது வழங்கும் விழா அண்மையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறந்த அடைவு நிலை அடைந்த பேரா மாநிலத்தின் 134 தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 113 மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் சாதனை விருதுகளைப் பெற்றனர். மற்ற மாணவர்களுக்கு புதிய உத்வேகம் வழங்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வட கிந்தா கல்வி அலுவலக உயர் அதிகாரி முகமட் அடேக் அப்துல் ரஹ்மான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில், குவேஸ்ட் இண்டர்நேசனல் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டத்தோ டாக்டர் செல்லையா, தலைமை ஆசிரியர்கள் சமூக தலைவர்கள்,, அரசு சார்பற்ற தலைவர்கள், பள்ளி மேலாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்களும் கலந்துகொண்டனர்.

சாதனை மாணவர்களில் சிறந்த 8 மாணவர்களுக்கு ரொக்கப் தொகை ,கேடயம் , வவுச்சர் மற்றும் நற்சான்றிழும் வழங்கப்பட்டது. அந்த மாணவர்களுக்கு காலஞ்சென்ற கல்விமான் டத்தோஸ்ரீ என்.எஸ் செல்வமணி அவர்களின் பெயரில் சிறப்பு கேடயமும், சிறப்பு வவுச்சர்களும் வழங்கப்பட்டன. 2 மாணவர்களுக்கு அமரர் துன் சம்பந்தன் விருது, கேடயம் , ரொக்கத் தொகை மற்றும் வவுச்சர்கள் வழங்கப்பட்டது . இதர 103 மாணவர்களுக்கு கேடயம் நற்சான்றிதழ் மற்றும் ரொக்கம் வழங்கப்பட்டது. இதனிடையே இரண்டாது ஆண்டாக நடைபெற்ற இந்த சாதனை நிகழ்வு தொடர்ந்து ஆண்டுதோறும் நடைபெறும் என ஏற்பாட்டுக் குழுவின் தலைவர்
நாச்சிமுத்து கருப்பண்ணன் தெரிவித்தார். இடைநிலைப்ப பள்ளிக்கு செல்லும் தமிழ் மாணவர்கள் அடுத்து வரும் ஆண்டுகளில் எஸ்.பி.எம் தேர்வுல் சிறந்த முறையில் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டு சிறந்த தேர்ச்சி பெற வேண்டும் என்பதோடு மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்விலும் தமிழ் மற்றும் தமிழ் இலக்கிய பாடங்களையும் எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!