Latestமலேசியா

பையில் பெண்ணின் உடலை மறைத்து வைத்த சம்பவம்: 7 நாட்கள் தடுப்புக்காவலில் சந்தேக நபர்

சிரம்பான், டிசம்பர் 19 – நெகிரி செம்பிலான் பெடாசில் (Pedas) அமைந்திருக்கும் Kampung Batu 4 பகுதியிலுள்ள வீட்டின் பின்புறத்தில் பையில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, போலீசார் ஆடவன் ஒருவனைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்பட்ட சந்தேக நபர் இன்று காலை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார் என்று மாநில துணை போலீஸ் தலைவர் Senior Asisten Komisioner Idzam Jaafar தெரிவித்துள்ளார்.

பெண்ணைக் கொலை செய்ததாக நம்படும் அந்த ஆடவனை மேல் விசாரணைக்கு உட்படுத்த, நீதிமன்றம் சுமார் 7 நாட்களுக்கு தடுப்பு காவல் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதனிடையே, உயிரிழந்த பெண்ணின் அடையாளம் மற்றும் மரண காரணத்தை உறுதி செய்ய, ரெம்பாவ் மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முன்னதாக, பாதிக்கப்பட்ட அப்பெண் சிலாங்கூர் அம்பாங் பகுதியில் காணாமல் போனதாக போலீசார் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!