
சிரம்பான். மார்ச் 17-பொதுமக்களிடையே பிளவை ஏற்படுத்தும் என்று அஞ்சப்பட்ட சமூக ஊடகப் பதிவை வெளியிட்ட குற்றத்தை ஒப்புக் கொண்ட e- Heiling ஓட்டுநர் ஒருவருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 4,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
அதோடு அந்த காணொளியை வெளியிட்டு , எந்தவொரு உள்நோக்கமும் இல்லாமல் அதனை பரப்பியதற்காக முஸ்லிம்களிடம் தாம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக குற்றம் சாட்டப்பட்டவரான 53 வயதான பி. மகேந்திர பூபதி, இன்று சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தனது முகநூல் கணக்கில், பொதுமக்களில் எவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தி, பொது ஒழுங்கிற்கு எதிரான குற்றத்தைச் செய்ய அவர்களைத் தூண்டக்கூடிய ஒரு அறிக்கையுடன் கூடிய காணொளிப் பதிவை பதிவேற்றியதாக மகேந்திர பூபதிக்கு எதிராக குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.
பிப்ரவரி 27ஆம் தேதியன்று மதியம் சுமார் 12.30 மணியளவில் ஜாலான் ராசா , டத்தோ பண்டார் ஹாஜி அகமட் ரசாவில் உள்ள மஸ்ஜிட் ஜாமேக்கில் இக்குற்றத்தை புரிந்ததாக மாஜிஸ்திரேட் Nurul Saqinah Rosli முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டார்.



