
கோலாலம்பூர், பிப்ரவரி-14 – தலைநகர் தித்திவங்சாவில் முறையான அனுமதியில்லாமல் பொது மக்கள் நடந்து செல்லும் பாதைகளில் போடப்பட்டிருந்த நாற்காலிகள், மேசைகள், கூடாரங்கள் மற்றும் இதர பொருட்களை, கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL பறிமுதல் செய்துள்ளது.
டேசா பாண்டான் மற்றும் ஜாலான் ஈப்போவில் அந்த அதிரடிச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் வியாபார நோக்கத்திற்காகக் பயன்படுத்தப்பட்டவையாகும்.
சோதனையின் போது பல வாடிக்கையாளர் கூடாரங்களில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பறிமுதல் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களும் செராசில் உள்ள கிடங்கிற்குக் கொண்டுச் செல்லப்பட்டன.
இது போன்ற சோதனை மற்றும் அமுலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுமென BBKL எச்சரித்தது.