பொந்தியான், செப்டம்பர் -21 – ஜோகூர் பொந்தியான், Jeti Kukup Laut-டில் ஐஸ் கட்டி பொட்டலங்களை நிரப்பிக் கொண்டிருந்த லாரி திடீரென குடை சாய்ந்து, ஐஸ் கட்டிகளை இறக்கும் பணியாளரான முதியவர் உடல் நசுங்கி மாண்டார்.
நேற்று காலை 7.15 மணியளவில் அந்த jeti-யின் காங்கிரீட் தரை திடீரென சரிந்ததால், லாரி கவிழ்ந்து அருகில் நின்றிருந்த அவ்வாடவர் மேலே விழுந்தது.
தீயணைப்பு – மீட்புத் துறையினர் சிறப்புக் கருவிகளைக் கொண்டு அவரை வெளியே எடுத்த போது, 64 வயது அம்முதியவரின் உயிர் பிரிந்திருந்தது.
விசாரணையில் குற்ற அம்சங்கள் எதுவும் கண்டறியப்படாததால், அச்சம்பவத்தை பொந்தியான் போலீஸ் திடீர் மரணமாக வகைப்படுத்தியுள்ளது.