சிக், நவ 27 – சிக் ( Sik) Pinggir Kampung Lubuk Tualang கில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த சிறுத்தை, பெர்ஹிலித்தான் எனப்படும் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா ஊழியர்களால் பிடிக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குடியிருப்பாளர்களின் கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகள் மீது அந்த சிறுத்தை தாக்குதல் நடத்தியதாக கெடா மாநில பெர்ஹிலித்தான் இயக்குனர் டாக்டர் அப்துல் மாலேக் ( Abdul MaleK ) தெரிவித்தார்.
அதே நாளில், மாவட்ட பெர்ஹிலித்தான் ஊழியர்கள் மேற்கொண்ட விசாரணையில் இரண்டு இடங்களில் சிறுத்தையின் கால் பாதங்களின் அச்சு அடையாளத்தை கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து வைக்கப்பட்ட பொறியில் நேற்று காலையில் அந்த ஆண் சிறுத்தை சிக்கியது. அந்த மிருகத்திற்கு எந்த நோயும் இல்லையென பரிசோதனையில் தெரியவந்த பிறகு மனிதர்கள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் அது விடப்படும் என அப்துல் மாலேக் கூறினார்.