கோலாலம்பூர், பிப் 11 – SOP யை மீறிய குற்றத்திற்காக 6 பொழுது போக்கு மையங்களின் உரிமையாளர்கள் மற்றும் அந்த மையங்களுக்கு வருகை புரிந்த 139 தனிப்பட்ட நபர்களுக்கு மொத்தம் 145,000 ரிங்கிட் அபராதத்திற்கான குற்றப் பதிவுகள் வழங்கப்பட்டன. அவர்கள் அனைவருக்கும் தலா ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதாக கோலாலம்பூர் குற்றத் தடுப்பு மற்றும் சமூக பாதுகாப்புத் துறையின் தலைவர் Azman Ayob கூறினார். ஜனவரி 1ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 4ஆம்தேதிவரை பொழுது போக்கு விடுதிகளில் கோவிட் தொற்று பரவலை தடுப்பதற்கான SOP விதிமுறைகளை பின்பற்றத் தவறிய மொத்தம் 280 பேருக்கு குற்றப்பதிவு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close
-
சிலாங்கூரில் 18 தொகுதிகளில் DAP போட்டி15 hours ago