
கோலாலம்பூர், ஜன 28 – போதைப் பொருள் மற்றும் கோடின் (Codine ) கலவையைக் கொண்ட இரும்மல் மருந்தை விநியோகம் செய்து வந்ததாக நம்பப்படும் செலயாங் மொத்த சந்தையான Pasar Borong கில் வேலை செய்துவந்த மியன்மாரைச் சேர்ந்த இரண்டு நபர்கள் வெவ்வேறு நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை காலை மணி 10 .15 அளவில் 26 வயதுடை முதல் சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்ட வேளையில் மற்றொரு சந்தேகப் பேர்வழி ஒரு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக செந்துல் மாவட்ட போலீஸ் தலைவர் துணைக் கமிஷனர் அகமட் சுகர்னோ ( Ahmad Sukarno ) கூறினார்.
அந்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நான்கு பெட்டிகளில் 95 போத்தல்களில் இருந்த இருமல் மருந்து மற்றும் 53.79 கிரேம் Methamphetamine போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த இரண்டு நபர்களும் கடந்த ஆறு மாதங்களாக தீவிரமாக போதைப் பொருளை விநியோகித்து வந்ததாகவும் தற்போது விசாரணைக்கு உதவும் பொருட்டு ஏழு நாட்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என அகமட் சுகர்னோ செய்தியாளர்களிம் தெரிவித்தார்.



