
போர்டிக்சன், மார்ச்-26-நெகிரி செம்பிலான், போர்டிக்சனில், 9 வயது ஆட்டிசம் சிறுவன் ஹோட்டல் ஏரியில் மூழ்கியதால் ஒரு குடும்பத்தின் விடுமுறை துயரத்தில் முடிந்துள்ளது.
லுக்குட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்த அச்சிறுவன், பிற்பகல் 3.30 மணியளவில் ஹோட்டல் அறையிலிருந்து யாரும் கவனிக்காத சமயத்தில் வெளியேறியதாக போலீஸ் தெரிவித்தது.
பின்னர் பையனைக் காணாது குடும்பத்தினர் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள் தேடிய போது, அவனை ஏரியில் கண்டுபிடித்தனர்.
சிறுவனின் மரணத்திற்கு நீரில் மூழ்கியதே காரணம் என சவப்பரிசோதனையில் உறுதியானது.
இதையடுத்து திடீர் மரணமாக இச்சம்பவம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகளை கவனிக்கும் போது எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கான வேதனையான நினைவூட்டலாக இச்சம்பவம் அமைகிறது.



