தும்பாட், அக்டோபர்-16 – பிரபல வர்த்தக முத்திரையின் பெயரில் டிக் டோக்கில் துணிமணிகளை விற்று வந்த ஆடவர், கிளந்தானில் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் (KPDN) கிளந்தான் கிளை, புகார்தாரரான காப்புரிமைப் பெற்ற நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் தும்பாட் Wakaf Bharu, Pasir Pekan-னில் உள்ள துணிக்கடையில் சோதனையிட்ட போது, 30 வயது அந்நபர் கைதானார்.
அதன் போது, அனுமதியின்றி வர்த்தக முத்திரைகள் அச்சிடப்பட்டிருந்த 131 ஜேக்கட்டுகள் (jackets) கைப்பற்றப்பட்டன.
அவற்றின் மதிப்பு 4,585 ரிங்கிட்டாகும்.
டிக் டோக்கில் நேரலை செய்து துணிகளை விற்று வந்தது உட்பட கடந்த பிப்ரவரி முதலே அவ்வாடவர் அந்நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதையடுத்து 2019 வர்த்தக முத்திரை சட்டத்தின் கீழ் அவர் விசாரிக்கப்படுகிறார்.