Latestமலேசியா

போலீசினால் 10 கிலோமீட்டர் துரத்திய பின் சந்தேகப் பேர்வழி கைது

கிள்ளான், மார்ச் 13-கிள்ளான் , பாண்டமரனில் உள்ள ஜாலான் பந்திங்கில் தப்பியோட முயன்றுபோது போலீஸ் MPV ரோந்து காரை மோதிய 31 வயது சந்தேக நபர் 10 கிலோமீட்டர் துரத்திச் சென்ற பின் கைது செய்யப்பட்டான்.

நேற்றிரவு மணி 8.30 அளவில் பாண்டமாரான் ஜாலான் பந்திங்கில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு காரை எதிர்கொண்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் லிம்ட ஜிட் ஹூவே ( Lim Jit Huey ) தெரிவித்தார்.

சந்தேக நபர் வெற்றிகரமாக கைது செய்யப்படுவதற்கு முன்பு இடதுபுறத்தில் ஒரு போலீஸ் ரோந்து காரை மோதி ஆக்ரோஷமாக செயல்பட்டதோடு அவனது கார் மேலும் இரண்டு கார்களையும் மோதியது.

கைது செய்யப்பட்ட அந்த ஆடவன் இதற்கு முன் ஐந்து குற்றச் செயல்கள் மற்றும் நான்கு போதைப்பொருள் குற்றப் பதிவுகளையும் கொண்டுடிருந்ததாக தெரியவந்துள்ளது.

அந்த நபரின் வாகனத்திற்குள் இரண்டு பொட்டலங்கள் கொண்ட மெத்தம்பெத்தமின் போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணைக்கு உதவும் பொரு சந்தேக நபர் மார்ச் 16ஆம்தேதிவரை தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!