Latestமலேசியா

போலீஸ் எம்.பி.வி வாகனத்தை மோதிவிட்டு தப்பியோடிய காதல் ஜோடி கைது

சிரம்பான், நவ- 10,

செனவாங் ,Jalan BPS 4 சிற்கு அருகே பெரோடுவா
பெஸா ( Bezza ) காரில் தனியாக இருந்த காதல் ஜோடி போலீசை கண்டவுடன் பரபரப்புடன் வெளியேறியபோது போலீஸ் MPV வாகனத்தில் மோதியபின் தப்பியோட முயன்றது. அதிகாலை 1.10 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், அந்த கார் காஜாங்- சிரம்பான் (Lekas) விரைவுச்சாலையில் சிரம்பானுக்கு வெளியேறும் இடத்திற்கு அருகில் உள்ள சுவரில் மோதிய பின் கவிழ்ந்தது. அதற்கு முன்னதாக அவர்களின் காரை சுமார் 45 நிமிடம் போலீஸ் ரோந்துக் கார் விரட்டிச் சென்றது. அக்காரில் இருந்த 23 வயது ஆடவரும் 22 வயதுடைய பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.

அரசு ஊழியரின் பணியை தனிக்க முயன்ற குற்றவியல் சட்டத்தின் 186 ஆவது விதியின் கீழ் கைது செய்யப்பட்ட அவர்களிடம் விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் துணைத்தலைவர் Superintendan முகமட் அமிருல் யாஷிட் அனுவார் ( Mohd Amirul Yazid Anuar ) தெரிவித்தார். இதற்கு முன்னதாக நான்கு MPV போலீஸ் ரோந்து வாகனங்கள் புரோடுவா பேஸா காரை துரத்திச் செல்லும் வீடியோ பதிவு ஒன்று வைரலானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!