Latestமலேசியா

மகனை இழந்த துயரத்தில் நடிகை அமிசா அஸ்னான்; தியோ நீ சிங் நேரில் சந்தித்து ஆறுதல்

பெட்டாலிங் ஜெயா, மார்ச்-13-பிரபல மலாய் நடிகை அமிசா அஸ்னான் (Amyza Aznan), தனது மூத்த மகன் என்ட்ரி மிக்காய்லை (Andre Mikhail) பிப்ரவரி 23-ஆம் தேதி நுரையீரல் புற்றுநோயால் இழந்ததைத் தொடர்ந்து, தொடர்புத் துறை துணையமைச்சர் தியோ நீ சிங் அண்மையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Ziarah Seni MADANI @FINAS திட்டத்தின் வாயிலாக அங்காசாபூரியில் அமிசாவை சந்தித்து ஆறுதல் கூறி, சிறிய அளவிலான நிதி உதவியையும் அவர் வழங்கினார்.

அமிசாவின் இரண்டாவது மகன் அட்ரியன் அடாம் (Adrian Adam), எலும்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஏற்கனவே மூத்த மகனை இழந்து தவிக்கும் அமிசாவின் இந்த இன்னல்களை, ஒரு தாய் என்ற வகையில் தம்மால் புரிந்துகொள்ள முடிவதாகக் கூறிய தியோ நீ சிங், இச்சோதனைகளை அவர் கடந்து வர பிராத்திப்பதாகக் கூறினார்.

இந்த Ziarah Seni MADANI திட்டத்தின் கீழ் 2023 முதல் இதுவரை 183 கலைஞர்கள் RM144,900 நிதி உதவியைப் பெற்றுள்ளனர்.

இவ்வாண்டு குறைந்தது 100 கலைஞர்களுக்கு உதவி வழங்கும் இலக்கை FINAS நிர்ணயித்துள்ளதாகவும் துணையமைச்சர் சொன்னார்.

இவ்வேளையில், அமிசா, தியோ நீ சிங் உட்பட இந்த கடினமான நேரத்தில் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!