Latestமலேசியா

மக்களவை சபாநாயகர் ஜோஹாரி அப்துல்லின் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டது; நண்பர்கள் மோசடிக்கு இலக்காகினர்

கோலாலம்பூர், மார்ச் 27 – மக்களவைத் தலைவர் ஜோஹாரி அப்துல்லின் (Johari Abdul) வாட்ஸ்அப் கணக்கை மோசடி செய்பவர்கள் ஹேக் (hack) செய்து, அவரது சில தொடர்புகளை ஏமாற்றி, ஆயிரக்கணக்கான ரிங்கிட்டை குற்றவாளிகளுக்கு மாற்றியுள்ளனர்.

தனது நண்பர் ஒருவர் RM20,000 வரை இழந்துள்ளார். மோசடி செய்பவர்கள் தங்கள் செய்திகளை ஒரு எளிய வாழ்த்துச் செய்தியுடன் தொடங்கி, பின்னர் தொடர்புகளிலிருந்து ஒரு தொகையை கடன் வாங்கி, மறுநாள் நிதியை அவர்களுக்குத் திருப்பி அனுப்புவதாக உறுதியளித்ததாக ஜோஹாரி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

தனது தொடர்புகளில் சிலர் இந்தச் செய்தியைப் பற்றி சந்தேகப்பட்டதாகவும், மற்றவர்கள் இந்தக் கோரிக்கை உண்மையானது என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

ஜோஹாரி இந்த மோசடி குறித்து மலேசிய தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையத்திடம் (MCMC) புகார் அளித்துள்ளார்.

இதுபோன்ற குறுஞ்செய்திகளைப் பெறும் எவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு அவர் வலியுறுத்தினார்.

இந்தச் செய்தியை யாராவது இன்னும் பெற்றுக்கொண்டிருந்தால், அவர்கள் அதனை புறக்கணித்து எந்தப் பணத்தையும் பட்டுவாடா செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

பணம் பட்டுவாடா செய்தவர்கள் போலீசில் புகார் அளிக்க வேண்டும். கட்டணச் சீட்டின் ஸ்கிரீன் ஷாட்டை (screen shot) எடுத்து எங்களுக்கும் அனுப்புங்கள், இதனால் நாங்கள் போலீஸ் மற்றும் MCMCயிடம் கவனத்திற்கு கொண்டுவருவோம் என்று அவர் கூறினார்.

இது மார்ச் 25 ஆம் தேதி தொடங்கியதாகவும், மோசடி செய்பவர்கள் தனது தொலைபேசி எண் மற்றும் சுயவிவரப் படத்தைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான தொடர்புகளுக்கு செய்தி அனுப்பியதாகவும் ஜோஹாரி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!