ஜியோர்ஜ்டவுன், அக்டோபர்-7 – பினாங்கு Lebuh Cecil சந்தையில் உள்ள ஒரு கடையில் வாங்கப்பட்ட கால் துடைக்கும் துணியில் (floor mats), இஸ்லாமியர்களின் புனிதத் தலமான காபா (Kaabah) மற்றும் மசூதியை ஒத்திருக்கும் படங்கள் இடம் பெற்றிருப்பதாக, மாநில போலீசுக்கு புகார் கிடைத்துள்ளது.
உள்ளூர் ஆடவரிடமிருந்து அப்புகார் கிடைத்தாக பினாங்கு இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ மொஹமட் அல்வி சைனால் அபிடின் ( Datuk Mohd Alwi Zailnal Abidin) தெரிவித்தார்.
தான் வாங்கிய கால் துடைக்கும் துணியில் காபா (Kaabah) மற்றும் மசூதியை ஒத்திருக்கும் படம் இடம் பெற்றிருந்ததாக அவ்வாடவர் தனது புகாரில் கூறியுள்ளார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளர் மற்றும் பணியாளர் என இரு உள்ளூர் ஆடவர்கள் கைதாகினர்.
இருவரையும் விசாரணைக்கு தடுத்து வைக்க இன்று கைது ஆணைப் பெறப்படவிருக்கிறது.
இந்நிலையில், எந்தவொரு தரப்பின் உணர்ச்சிகளையும் சீண்டும் வகையிலான யூகங்களை எழுப்பி, விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாமென, பொது மக்களை போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.