கோலாலம்பூர், நவம்பர்-20 – மடானி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, போக்குவரத்து சம்மன்களுக்கு 60 விழுக்காடு கழிவுச் சலுகையை போலீஸ் அறிவித்துள்ளது.
Program Dua Tahun Kerajaan Madani திட்டத்தின் ஒரு பகுதியாக, நவம்பர் 22 முதல் 24 வரை 3 நாட்களுக்கு அச்சலுகை வழங்கப்படும்.
கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சேவை முகப்பிடங்கள் திறந்திருக்கும் என உள்துறை அமைச்சின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.
கழிவுச் சலுகைக்கான தகுதி குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.
என்றாலும், முந்தையக் கழிவுச் சலுகை அறிவிப்புகளின் படி பார்த்தால், குறிப்பிட்ட சில குற்றங்களுக்கான அபராதங்களுக்கு சலுகைக் கிடையாது.
சாலை சமிக்ஞை விளக்கை மீறியது, அவசரப் பாதையைத் தவறாகப் பயன்படுத்தியது, இரட்டைக் கோட்டில் முந்திச் சென்றது, விபத்தில் சிக்கியது மற்றும் நீதிமன்றம் வரை சென்ற போக்குவரத்துக் குற்றங்கள் உள்ளிட்டவற்றுக்கு இதற்கு முன் கழிவுச் சலுகை வழங்கப்படவில்லை.
Op Selamat சம்மன்களும் அதில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.