
ஜோகூர் பாரு, மார்ச்-20 – ஜோகூர் பாரு, Danga Bay-யில் உள்ள ஓர் உணவகத்தின் முன் ஆடவர் ஒருவர் தனது கழுத்தை கத்தியால் வெட்டிக் கொண்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
27 வயதான அந்த நபர் தனது மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து அவ்வாறு செய்ததாக நம்பப்படுகிறது.
நேற்று விடியற்காலை அச்சம்பவம் நிகழ்ந்ததை, தென் ஜோகூர் பாரு போலீஸ் தலைவர் ரவூப் செலாமாட் உறுதிப்படுத்தினார்.
அவ்வாடவர் சுல்தானா அமீனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்நபர் தனது கழுத்தை அறுத்துக் கொள்ளும் வீடியோ முன்னதாக X தளத்தில் வைரலானது.
இந்நிலையில், தேவையற்ற யூகங்களையும் குழப்பங்களையும் தவிர்க்க, அவ்வீடியோவைப் பகிர்வதை நிறுத்துமாறு பொது மக்களை ரவூப் கேட்டுக் கொண்டார்.