Latestஅமெரிக்காஇந்தியாஉலகம்சிங்கப்பூர்

மருதமலையில் ஆசியாவிலேயே மிக உயரமான முருகன் சிலை 160 அடி உயரத்தில் உருவாகும்

சென்னை, ஜன 28 – ஆசியாவிலேயே மிக உயரமான 160 அடி கொண்ட முருகன் சிலை மருதமலை முருகன் கோயிலில் அமைக்கப்படவிருப்பதாக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேபர் பாபு (Segar Babu) தெரிவித்திருக்கிறார். கோவையிலுள்ள (Kovai) மருதமலை ஆலயத்திற்கு வருகை புரிந்த அவர் இத்தகவலை வெளியிட்டார். மருதமலை சுப்ரமணியசுவாமி ஆலய வளாகத்தில் உயரமான முருகன் சிலை அமைப்பது குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் செயலாளர், கூட்டு ஆணையாளர், மருதமலை ஆலய அறங்காவலர்கள் மற்றும் கோயம்புத்துர் (Coimbatore) கலெக்டர் ஆகியோருடன் உத்தேச சிலைக்கான இடத்தை ஆய்வு செய்த பின் சேகர் பாபு இத்தகவலை வெளியிட்டார். இந்த சிலை அமைக்கும் திட்டம் குறித்த அடிப்படை ஆய்வுகளில் ஆலோசகர்கள் ஈடுபடுவார்கள். அவர்களது அறிக்கைக்கு பின் இந்த விவகாரத்தை நாங்கள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுச் செல்வோம். அங்கீகாரம் கிடைத்தவுடன் 160 அடி உயர முருகன் சிலை நிர்மாணிப்பு பணிகள் தொடங்கும் என அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!