சின்தோக், செப்டம்பர் -15 – மெட்ரிகுலேஷன், Foundation, pre-U போன்ற கல்வியை முடித்து அரசாங்கப் பல்லைக்கழகங்களில் இடம் கிடைக்காத இந்திய மாணவர்களுக்காக, ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் 50% கல்வி உபகாரச்சம்பளத்துடன் மருந்தகத் துறையில் (pharmacy) பட்டப்படிப்பை வழங்குகிறது.
உலகத் தரத்திலான வசதிகளுடன் ஏய்ம்ஸ்ட் வழங்கும் மருந்தகப் பட்டப்படிப்பு அனைத்துலக அங்கீகாரம் பெற்றதாகும்.
மருத்துவத் துறையைப் போன்றே மருந்தகத் துறையும் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
ஒரு வீட்டுக்கு ஒரு மருத்துவர் என்பது போல ஒரு வீட்டுக்கு ஒரு மருந்தகர் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
எனவே, மருந்தகத் துறையில் இருக்கும் வேலை வாய்ப்புகளையும் நல்ல எதிர்காலத்தையும் மாணவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
தற்போது அக்டோபர் மாதத்திற்கான மாணவர் சேர்ப்பு நடைபெறுகிறது.
50% சலுகைக்கு குறிப்பிட்ட இடங்களே ஒதுக்கப்பட்டுள்ளதால், இப்போதே பதிந்துக் கொள்ளுமாறு மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்..